"ருத்ராவின் குறும்பாக்கள்." (1)
வம்சம்
வேரும் தெரியவில்லை.
கிளையும் தெரியவில்லை.
நிழலை தேடுகிறேன்.
======================
ஒய்
பாதை கூட
இந்த பயணம
ஏன் என்று கேட்கிறது.
=========================
பாரதி
"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி...."
கலிஃபோர்னியாவில் ஒரு எட்டை யபுரம்.
=====================================
ஒரு விளையாட்டு.
உஸ்! அப்பாடா!
மைல் கல் மறந்துபோனது.
கவண் கல் விடலாமா?
==========================================
தேர்வு
காதலா? கத்தரிக்காயா?
வாழ்க்கையின் "ஒற்றையா இரட்டையா"வில்
எந்தப் பக்கம் போவது?
==========================================
பச்சை நிறமே பச்சை நிறமே
குறிக்கோள் இல்லையென்றால்
எதிர் வரும்
பச்சைப்புல்கூட இருட்டு தான்.
============================================
நள்ளிரவில் கிடைத்தது
இன்னும் விடியவே இல்லை .
புதுக்கவிதையும்
"புராணம்"ஆகிப்போனது.
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக